Sep 16, 2011

பேஸ்புக்கின் புதிய subscribe பட்டன் அறிமுகம்

பேஸ்புக் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது  இந்தப் புதிய subscribe பட்டன் மற்றையவர்களின் பொதுவான செய்திகளைப் பின்பற்ற உதவும்.

இதற்கு நீங்கள் அந்நபரின் பேஸ்புக் நண்பராக இருக்கவேண்டியதில்லை.

இந்தப் புதிய செயற்பாடானது பேஸ்புக் பயனாளர்களுக்குத் தங்களது கணக்குகளிலும் செய்தித் தரவேற்றங்களிலும் கூடுதலான கட்டுப்பாட்டைத் தரக்கூடிய நிலையைத் தருகின்றது.

கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பட்டன் வசதியை Message மற்றும் Poke இற்கு அருகில் காணலாம். இது கிட்டத்தட்ட Twitter ஐப் போன்ற செயற்பாடை ஒத்ததாக காணப்படும்.

நண்பர்களின் பக்கங்களைப் பார்க்கும்  போது இந்தப் பட்டன் சற்று வித்தியாசமாகச் செயற்படும். அந்தச் செய்தியை வெளியிடும் பயனாளர் உங்களது நண்பரென்றால் அவரது உள்ளடக்கங்கள் உங்களது கணக்கிற்குள் எப்படி நுழைகின்றது என்பதைப் பார்க்கவும் முடியும்.

மற்றவர் வெளியிடும் அனைத்துச் செய்திகளையும் நீங்கள் பார்வையிட விரும்பினால் All Updates என்று காட்டும் விடயத்தைத் தெரிவுசெய்யலாம்.

இல்லாவிடில் உங்களது நண்பரில் ஒருவரைத் தவிர்க்க நினைத்தால் Subscribe பட்டனின் கீழுள்ள Only Important என்ற தெரிவினைத் தெரிவுசெய்யுங்கள்.

ருவிட்டரைப் போலவே உங்களது பொதுவாக வெளியிடும் கருத்துக்களைப் பற்றிப் பலர் கருத்துக் கூறும் வசதியை இது தருகின்றது.

இவ்வாறு வெளிப்படையாக விடப்படும் பேஸ்புக் கருத்துக்களால் நீங்கள் பல ரசிகர்களைப் பெறமுடியும்


இந்த  சேவையைப்பேற public subscriber option





Related Posts

பேஸ்புக்கின் புதிய subscribe பட்டன் அறிமுகம்
4/ 5
Oleh
>