Sep 17, 2011

திருட்டு gmail id உருவாக்குவது எப்படி

ஒரு ஜிமெயில் அக்கவுன்ட் மூலம் எல்லையில்லாத பெயர்களில் போலி ஜிமெயில் முகவரிகளை உருவாக்குவது எப்படி


நம்மில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுன்ட்களை பல தேவைகளுக்காக வைத்திருப்போம்.ஆனால் ஒரே ஜிமெயில் அக்கவுன்ட் மூலம் பல்வேறு ஜிமெயில் முகவரிகளை உருவாக்கும் வாய்ப்பை 'Google-ன் ஜிமெயில் தபால்பெட்டி சேவை' ஏற்படுத்தியுள்ளது என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.

குறிப்பு:- இம்முறையில் நாம் உருவாக்கும் புதிய இமெயில் முகவரிகளுக்கு அனுப்பப்படும் தபால்கள்(E-Mail) கூட நம் உண்மையான ஜிமெயில் முகவரிக்கே கிடைக்கும்.

சரி எவ்வாறு உருவாக்குவது என்று பார்ப்போம் 

உங்கள் மெயில் G-Mail முகவரி "username@gmail.com" என்று இருக்கும்.இதை நீங்கள் புள்ளி (full stop or dot) மூலம் பல முகவரிகளாக மாற்ற முடியும்.

உதரணமாக உங்களின் உண்மை முகவரி: "username@gmail.com" எனக் கொண்டால் நீங்கள் கீழ்காணும் முறையில் புள்ளிகளை மாற்றி மாற்றி வைத்து பல முகவரிகளை உருவாக்க முடியும்

போலி முகவரி1:"u.sername@gmail.com"
போலி முகவரி2:"us.ername@gmail.com"
போலி முகவரி3:"use.rname@gmail.com"
போலி முகவரி4:"user.name@gmail.com"
போலி முகவரி5:"usern.ame@gmail.com"
போலி முகவரி6:"userna.me@gmail.com"
போலி முகவரி7:"usernam.e@gmail.com"

இதேபோல் username உடன் +(கூட்டல் குறி) மூலம் எந்த வார்த்தையை அல்லது பெயர்களை இணைத்து போலி முகவரிகளை உருவாக்க முடியும்.  மேலும்  பார்க்க வேண்டுமா

Related Posts

திருட்டு gmail id உருவாக்குவது எப்படி
4/ 5
Oleh