Sep 19, 2011

facebook ல் இருந்தபடி ருவிட்டரில் செய்தியிடலாம்


கூகுல் பிளசின் போட்டியாக  facebook நாளுக்கு நாள் புதுப்புது வசதிகளை அள்ளி வழங்கி வருகிறது.

பலரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த புதிய சேவையொன்றை facebook விரைவில் வழங்கவுள்ளது.

twitter இலுள்ள தமது நண்பர்களுடன் facebook இலிருந்தவாறே தகவல்களை பரிமாறும் வசதியே அதுவாகும். இந்த வசதியைப்பெறுவதற்கு   உங்கள் facebook கணக்கை twitter கணக்குடன் இணைக்க வேண்டும்.

பின்னர் நீங்கள் facebook இல் பரிமாறும் ஒவ்வொரு பொது தகவல்களும் உங்கள் twitter கணக்கில் தானாக பதிவாகும்.

இந்த புதிய வசதி இன்னும் ஒருவார காலத்தில் அறிமுகப்படுத்தப்படுமென facebook அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். twitter இலிருந்து இது தொடர்பாக  எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த சேவை மூலம் facebook பாவனையாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts

facebook ல் இருந்தபடி ருவிட்டரில் செய்தியிடலாம்
4/ 5
Oleh
>