Aug 9, 2011

google+ ஐ மொபைலில் பயன்படுத்துவது எப்படி?


கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஒரு புதிய சோஷியல் நெட்வொர்க் தளம் தான் ‘கூகுள் பிளஸ்’.
இப்போ சோதனை ஓட்டமா இதை அறிமுகப்படுத்தியிருக்குது கூகுள்.காரணம் கூகுளோட ரசிகர்கள் இதுல ஏதேனும் குறைகளை சொன்னா அதை நிவர்த்தி பண்ணி அப்புறமா ஒரு முழுமையான தளமா குடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கு. கூடிய சீக்கிரம் இதில் இருக்குற சின்ன சின்ன குறைகளை எல்லாம் நிவர்த்தி பண்ணி ஃபேஸ்புக், டிவிட்டருக்கு நிகரா ‘கூகுள் பிளஸ்’ வரும்னு நாம நம்பலாம்.


ஜிமெயிலை அறிமுகப்படுத்தின புதுசுல எப்படி அதை ஏற்கனவே யூஸ் பண்ணுற ஒருத்தர் நம்மளை இன்வைட் பண்ணினா அதை பயன்படுத்த முடியும்கிற மாதிரி கூகுள் பண்ணிச்சோ அதே நிலமை தான் கூகுள் பிளஸ்க்கும். ஆமாம்,நா ம கூகுள் பிளஸ் தளத்தை முழுமையா பயன்படுத்தனும்னா அதை ஏற்கவே யூஸ் பண்ணுற நண்பர் யாராவது ஒருத்தர் நமக்கு இமெயில்ல இன்வைட் அனுப்பனும். அப்போதாம் நாம யூஸ் பண்ண முடியும்.


சரி டெஸ்க்டாப், லேப்டாப்ல கூகுள் பிளஸ் ஈசியா பயன்படுத்தலாம். மொபைல்ல அது சாத்தியமா? கண்டிப்பா சாத்தியம் தான். ஆனா அதிலேயும் இன்னும் முழுமை இல்லை. இருந்தாலும் முடிஞ்சவரைக்கும் மொபைல்ல ‘கூகுள் ப்ளஸ்’ ஐ எப்படி பயன்படுத்தலாம்னு இங்க பாக்கலாம்.


நீங்க ஆன்ட்ராய்டு ஒ.எஸ் உள்ள மொபைல்ல 2.1 இல்லேன்னா அதுக்கும் மேல உள்ள வெர்ஷன் வெச்சிருந்தீங்கன்னா முதல்ல உங்களோட ஆன்ட்ராய்டு மார்க்கெட்டை அப்டேட் பண்ணிட்டு அங்க இருக்குற சர்ச் பாக்ஸ்ல google+ ன்னு டைப் பண்ணி தேடுனீங்கன்னா வர்ற அப்ளிகேஷன்கள்ல முதல் அப்ளிகேஷன் அதுவாத்தான் இருக்கும். அதை கிளிக் பண்ணி இன்ஸ்டால் பண்ணி நீங்க ‘கூகுள் பிளஸ்’ ஐ யூஸ் பண்ண ஆரம்பிக்கலாம்.


ஆனா இப்போதைக்கு அமெரிக்காவுல இருக்குற ஆன்ட்ராய்டு மொபைல்களுக்கு மட்டும் தான் இந்த தனிப்பட்ட அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்யக்கூடிய வசதி இருக்குன்னு கூகுள் சொல்லியிருக்கு. மத்த நாட்டுல உள்ளவங்க நம்ம மொபைலோட ப்ரௌசர்ல m.google.com/plus ன்னு அட்ரஸ் டைப் பண்ணி கூகுள் பிளஸ் யூஸ் பண்ண முடியுமாம்.


அதெப்படி அவங்க மட்டும் தனி அப்ளிகேஷனா பயன்படுத்தலாம். நம்மளால முடியாதான்னு நீங்க கேக்கலாம். கண்டிப்பா முடியும். எப்படி? ரொம்ப சிம்பிள், உங்க கணிணியில ஆன்லைன்ல போயிட்டு இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க, அப்புறமா ஓபன் ஆகுற பக்கத்துல நடுவுல view ன்னு இருக்குறதை கிளிக் பண்ணுனா உங்க ஆன்ட்ராய்டு போனுக்கான ‘கூகுள் பிளஸ்’ அப்ளிகேஷன் டவுன்லோடு ஆகும். அதை அப்படியே உங்க மொபைல இன்ஸ்டால் பண்ணி நீங்க ‘கூகுள் பிளஸ்’ஐ பயன்படுத்தலாம்.


இப்போதைக்கு ஆன்ட்ராய்டு ஒ.எஸ் மொபைல்களுக்கும், ஆப்பிள் ஐ-போனுக்கு மட்டும் தான் இந்த தனி அப்ளிகேஷன் வந்திருக்கு. ஆப்பிள் ஐ-போனுக்கு அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்க. சிம்பியன் ஓ.எஸ், பிளாக்பெர்ரி ஓ.எஸ்,விண்டோஸ் மொபைல் ஓ.எஸ் போன்ற மற்ற மொபைல் ஓ.எஸ்களுக்கு இன்னும் தனி அப்ளிகேஷன் வரல. இதுலேயும் மொபைல்ல இருக்குற ப்ரௌசர்ல போயி m.google.com/plus ன்னு அட்ரஸ் டைப் பண்ணி மட்டும் தான் ‘கூகுள் ப்ளஸ்’ ஐ யூஸ் பண்ண முடியும். இந்த ஓ.எஸ் களுக்கான ‘கூகுள் ப்ளஸ்’ தனி அப்ளிகேஷனும், எஸ்.எம்.எஸ் மூலமா ‘கூகுள் ப்ளஸ்’ ஐ பயன்படுத்துற வசதியும் கொஞ்சம் லேட்டா வரும்.


மேலதிக தகவல் 








Related Posts

google+ ஐ மொபைலில் பயன்படுத்துவது எப்படி?
4/ 5
Oleh
>