Aug 12, 2011

Games in Google plus விளையாட்டுகள் ஆரம்பம்

சமூக வலைத்தளங்களிடையே ஒரு மாபெரும் போட்டி நிலவி வருகிறது. அது "தம்மில் யார் அதிகமான மக்களை இணையத்தில் அடிமையாக வைத்திருப்பது?" என்பது தான். தற்போது அந்த போட்டியில் மோதும் முக்கிய போட்டியாளர்கள் கூகிளும், பேஸ்புக்கும் தான்.

பேஸ்புக் தளத்தில் அதிக வரவேற்பை பெற்ற வசதிகளில் ஒன்று விளையாட்டுகள். பேஸ்புக் பயனாளர்கள் 750 மில்லியன் நபர்களில் சுமார் 200 மில்லியன் நபர்கள் இதனை விளையாடுகிறார்கள் (நான் மில்லியன்களில் ஒருவன்!). பேஸ்புக்கிற்கு ஒவ்வொரு அடியாக கொடுத்துவரும் கூகிள் ப்ளஸ், ஏற்கனவே கூகுள் ப்ளஸ்  செய்திகள் என்ற பதிவில் சொல்லியிருந்தது போல, தற்போது தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது. அதாவது கூகிள் ப்ளஸ்ஸில் விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் வழக்கம் போல, கொஞ்சம் கொஞ்சமாக தான் அனைவருக்கும் வரும். அது வரை காத்திருக்க வேண்டும்.

உங்கள் கூகிள் ப்ளஸ் முகப்பு பக்கத்தின் மேலே Home, Photos, Profile, Circles என்ற Tab-ற்கு அருகே புதிதாய் ஒரு Tab இருக்கும். அது தான் Google Plus Game-ன் Tab-ஆகும். இன்னும் எனக்கு வரவில்லை. உங்களுக்கு வந்திருந்தால் விளையாடி பார்த்து சொல்லவும்.

விளையாட்டுகளும் வசதிகளும்:


இணையத்தில் பிரபலமான Angry Birds Game உள்பட மேலும் சில விளையாட்டுகள் (படத்தை பார்க்கவும்) தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பல விளையாட்டுக்கள் வரும் எனவும் கூகுள் தெரிவித்துள்ளது.

##உங்கள் Circle-ல் உள்ளவர்கள் சமீபத்தில் விளையாடிய விளையாட்டுக்கள் பற்றிய தகவல்களை பார்க்கலாம்.

## ஒரே விளையாட்டில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடலாம். (பேஸ்புக் விளையாட்டு போல).

## விளையாட்டில் நீங்கள் எடுத்த மதிப்பெண்களை நண்பர்களுடன் பகிரலாம் (பேஸ்புக் விளையாட்டு போல).

##உங்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் இல்லை என்றால், அதனை செயல்நீக்கம் (Disable) செய்யலாம்.


Related Posts

Games in Google plus விளையாட்டுகள் ஆரம்பம்
4/ 5
Oleh