Jun 16, 2011

டென்மார்க் உள்நாட்டில் தயாரித்த விண்வெளி விமானத்தை ஏவுகிறது

டென்மார்க்கின் தனியார் விண்வெளி விமான நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை டிக்கோ பிராஹே விண்வெளி விமானத்தை HEAT-1Xஏவுகனை பொருத்தி பால்டிக் கடற்பகுதியிலிருந்து விண்வெளிக்கு அனுப்பி வைத்ததன் மூலம் மிகப்பெரிய முன்னேற்றத்தை எட்டியுள்ளது.

டிக்கோ பிராஹே விண்வெளி விமானத்தில் விமானி பாதி இருந்த படியும் பாதி நின்றபடியும் இதனை செலுத்த வேண்டும். விமானி இயக்கப் பிடியினைப் பயன்படுத்தி கலத்தின் பக்கவாட்டில் உள்ள சிறிய ஊடுருவி செலுத்தும் கருவியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அத்தோடு படங்களை எடுப்பதற்கான கெமரா அல்லது வாந்தி (கழிவு வெளியேற்றம்) எடுப்பதற்கான பையினைப் பிடித்திருக்க வேண்டும்.


இந்தத் திட்டத்திற்கு முழுவதுமாக 70,000 அமெரிக்க டொலர்கள் இதுவரை செலவிடப்பட்டுள்ளதோடு இந்தத் தொகை கூட்டு உபயத்தார்கள் மற்றும் தனியார் நன்கொடையாளர்கள் மூலம் திரட்டப்பட்டது. இந்த குறைந்த செலவிலான தயாரிப்பு அதிக சிக்கல்களை இவர்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடும் என சுயாதீன விண்வெளி விமான ஆலோசகர் சார்ள்ஸ் லுரியோ தெரிவித்துள்ளார்.


மாஸ்டன் ஸ்பேஸ் சிஸ்டம்ஸ் மற்றும் அர்மேடில்லோ ஏரோஸ்பேஸ் போன்ற தனியார் கம்பெனிகள் அண்மையில் நாசாவிடமிருந்து 475,000 அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொண்டன. இந்த டிக்கோ பிராஹே டென்மார்க்கின் மிகப்பெரிய ஏவுகணை சாதனை. எதிர்காலத்தில் நபர் ஒருவரை ஏற்றிக் கொண்டு இந்த விண்வெளி விமானம் பறக்கக் கூடும் என கொப்பன்ஹேகன் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.


அவ்வாறு நிகழ்ந்தால் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் நான்காவது நாடாக டென்மார்க் இருக்கும். அத்தோடு பொது நிதியில்லாமல் முதன் முறையாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.


இந்த விமானம் பூமிக்கு மீள்திரும்பும் போது கிட்டத்தட்ட ஒன்றரை நிமிடங்கள் வரை பூஜ்ஜியம் புவியீர்ப்பு சக்தியினை எதிர்கொள்ள நேரும். இறுதியாக பாரசூட் ஒன்றினைப் பாவித்து விமானி நீருக்குள் குதித்து படகு ஒன்றின் மூலம் மீட்கப்படுவார்.


கொபன்ஹேகன் ஸ்தாபகர்கள் இந்த விமானத்தைத் தயாரிக்கும் இந்த இருவரதும் முயற்சி தனிப்பட்டது என தெரிவித்துள்ளனர். இதைத் தயாரிப்பதற்காக நாசாவிடம் இருந்து எதையாவது எதிர்பார்த்துக் காத்திருந்து கடைசியில் தாமாகத் தயாரிக்க தீர்மானித்ததாக மெட்சன் டென்மார்க்கின் பத்திரிகை ஒன்றிற்கு குறிப்பிட்டுள்ளார்.


கிறிஸ்டியன் வொன் பெங்க்ஸ்டன் போலி மனிதனை வைத்து விண்வெளி விமானத்தைப் பரிசோதிக்கிறார்.


இந்த எதிர்காலத் திட்டம் நன்றாக நடைபெற்றால் 2013ஆம் ஆண்டளவில் மனிதனைக் கொண்ட விமானத்தை ஏவ முடியும் என கொபன்ஹேகன் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.



















Related Posts

டென்மார்க் உள்நாட்டில் தயாரித்த விண்வெளி விமானத்தை ஏவுகிறது
4/ 5
Oleh