Apr 19, 2011

மாறியது நான் ...




















நீயாகவே இப்போது மாறிவிட்டேன் நான்.
தீயாகஇருந்த பொழுது கரைந்துபோய்-உன்
தோள் உறங்கும் சேயாக ஆனேனடி
எங்கோ கண்காணா தேசத்தில் நீ வடிக்கும்
கண்ணீர் இங்கு என் கன்னத்தில் சுடுகுதடி.
உன் அழகிய ஊரில் பொழியும் சிறுமழைக்காக
இங்கு குடைபிடித்துப்போகிறேன் நான்-அட
நீயாகவே மாறியே விட்டேன் நான்.
சாரல் மழையில் நீ அங்கு நனைந்தபோதினில்
இங்கு எனக்கு தும்மல் பிடித்துப்போகிறது கண்ணே
மௌனமாக இருந்து கொண்டே உன்னுடன்
பேசிக்கொண்டிருக்க என்னால் முடிகிறது-நான்
நீயாக மாறிவிட்டதனால்
எனக்காக நீ செய்யும் விரதங்களிலும் நேர்த்திகளிலும்
நான்தான் மிக மெலிந்துபோகிறேன்-புரிந்துகொள்
உன்னை வருத்தி எதுவும் எனக்காக
செய்துவிடாதே-ஏனென்றால்
நீயாகவே இப்போது நான் மாறிவிட்டேன் நான்...

Related Posts

மாறியது நான் ...
4/ 5
Oleh